மாலத்தீவில் உள்ள இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே சிங்கப்பூருக்கு சவூதி விமானத்தில் வருவதாக பிபிசி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அவர் மாலத்தீவிலிருந்து கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
திரு ராஜபக்சேவும் அவரது மனைவியும் நேற்றிரவு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மூலம் சிங்கப்பூருக்கு வரவிருந்தனர். பாதுகாப்பு அக்கறையால் அவர்கள் அந்த விமானம் பயணம் செய்யவில்லை.
இதனையடுத்து அவர் மாலத்தீவு அதிகாரிகளிடம் ஒரு தனியார் விமானத்துக்கு வேண்டுகோள் விடுத்ததாகத் தெரிகிறது.
திரு கோத்தபயா இன்னும் சற்று நேரத்தில் மாலத்தீவிலிருந்து புறப்படுவார் எனக் கூறப்பட்டது. சிங்கப்பூர் வந்தடைந்ததும் அவர் தனது பதவி விலகலை அறிவிப்பார் என நம்பப்படுகிறது.

