இஸ்ரேல்-அமெரிக்க பாதுகாப்பு உறவு விரிவாக்கம்

இஸ்ரேல்-அமெரிக்க பாதுகாப்பு உறவு விரிவாக்கம்

1 mins read
b6c771c7-6130-4d8b-8eb9-e6b628c197e9
ஜெருசலத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் (இடது) இஸ்ரேலின் தற்காலிகப் பிரதமர் யாயர் லப்பிட்டும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். திரு பைடன் மத்திய கிழக்கு வட்டாரத்துக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.படம்: ஏஎஃப்பி -

டெல் அவிவ்: அமெ­ரிக்­கா­வுக்­கும் இஸ்­ரே­லுக்­கும் இடை­யி­லான பாது­காப்பு உறவை விரி­வ­ப­டுத்த கூட்டு ஒப்­பந்­தம் ஒன்று கையெ­ழுத்­தா­கி­யுள்­ளது. அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னும் இஸ்­ரே­லின் தற்­கா­லி­கப் பிர­த­மர் யாயர் லப்­பிட்­டும் அந்த ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­ட­னர்.

மத்­திய கிழக்கின் நிலைத்­தன்­மை­யில் பாதிப்பை ஏற்படுத்த ஈரான் எடுக்­கும் முயற்சி­க­ளை முறியடிப்பது இந்த ஏற்­பாட்­டின் இலக்­கு­களில் ஒன்று. ஈரானை என்­றுமே அணு­வா­யு­தங்­களை வைத்­தி­ருக்­கா­மல் பார்த்­துக்­கொ­ள்வ­தற்­கான குறிப்பு ஒப்­பந்­தத்­தில் இடம்­பெற்­றுள்­ள­தா­க­வும் பைடன் தரப்பு அதி­காரி ஒரு­வர் கூறி­னார்.

பதற்­றம் அதி­க­ரித்து வரும் நிலை­யில் ஈரா­னைக் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு திரு பைடன் மீது நெருக்­கு­தல் இருந்­து வருகிறது. அதைத் தொடர்ந்து தற்­காப்பு ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தானது.

மேலும், தேசிய அள­வில் தனது ஆற்­றலை முழு­மை­யா­கப் பயன்­படுத்தி ஈரானை அணு­வா­யு­தங்­கள் வைத்திருப்பதைத் தவிர்க்க அமெ­ரிக்கா தயா­ராய் இருப்­ப­தா­கத் திரு பைடன் குறிப்­பிட்­டார்.

இஸ்­ரே­லுக்­குத் தாம் மேற்­கொண்ட அதி­கா­ரத்­து­வப் பய­ணத்­தின் இரண்­டாம் நாளான நேற்று அவர் திரு லிப்­பிட்­டு­டன் இணைந்து இந்த வாக்­கு­று­தியை அளித்­தார்.

ஈரா­னின் அணு­வா­யு­தத் திட்­டத்தை ஆகப் பெரிய மிரட்­ட­லாக இஸ்­ரேல் கரு­து­கிறது.

தமது மத்­திய கிழக்­குப் பய­ணத்­தின் அடுத்த அங்­க­மாக திரு பைடன் இன்று சவூதி அரே­பியா செல்­ல­வி­ருக்­கி­றார். அவர், இஸ்­ரே­லி­லி­ருந்து நேரடியாக சவூதி அரே­பி­யா­வுக்கு அதிகாரத்துவப் பய­ணம் மேற்­கொள்­ள­வி­ருக்­கும் முதல் அமெரிக்க அதிபர்.