விளையாட்டுத் துளிகள்

காலிறுதிக்கு முன்னேறிய லோ

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் ஆகச் சிறந்த ஆண்கள் பூப்பந்து வீரரான லோ கியன் இயூ (படம்) சிங்கப்பூர் பூப்பந்து பொதுவிருதுப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்தோனீசியாவின் டாமி சுகியார்த்தோவை 21-13, 21-17 எனும் ஆட்டக்கணக்கில் போராடி வெற்றிகண்டார் லோ.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் டெரி ஹீ, லோவின் சதோதரரான லோ கியன் ஹியன் ஆகியோரும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். அவர்கள் மலேசியாவின் ஜுனாய்டி அரிஃப், ஹைக்கல் முகம்மது ஆகியோரை 21-9, 21-17 எனும் ஆட்டக்கணக்கில் வென்றனர்.

செல்சியில் சேர்ந்த ஸ்டெர்லிங்

லண்டன்: இங்கிலாந்து காற்பந்து நட்சத்திரம் ரஹீம் ஸ்டெர்லிங் (படம்) செல்சி அணியில் சேர்ந்துள்ளார். ஸ்டெர்லிங் இதற்கு முன்பு விளையாடிய மற்றோர் இங்கிலிஷ் பிரிமியர் லிக் அணியான மான்செஸ்டர் சிட்டியிலிருந்து செல்சி இவரை சுமார் 50 மில்லியன் பவுண்ட் தொகைக்கு வாங்கியுள்ளது.

27 வயது ஸ்டெர்லிங் ஓர் இளையராக முதன்முதலில் லிவர்பூல் அணியில் பிரபலமானார். அதற்குப் பிறகு அவரை சிட்டி வாங்கியது.

சிட்டியில் மிகச் சிறப்பாக ஆடிய ஸ்டெர்லிங் அண்மைக் காலமாக அந்த அணியில் எதிர்பார்த்த அளவு அதிகம் விளையாடவில்லை.

கைதுசெய்யப்பட்ட காற்பந்து வீரர் அணியிலிருந்து நீக்கப்படவில்லை

லண்டன்: பாலியல் வன்கொடுமை புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் இங்கிலிஷ் பிரிமியர் லிக் காற்பந்து அணி ஒன்றுக்கு விளையாடும் ஒரு வீரர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆனால் அந்த விளையாட்டாளரின் அணி அவரை தற்காலிகமாக நீக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 வயதுக்கு மேல் ஆன அந்த விளையாட்டாளரின் பெயர் உள்ளிட்ட அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. அவரின் அணி குறித்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!