இங்கிலாந்து பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக் 3 ம் சுற்றுக்கு முன்னேறினார்

இங்கிலாந்து பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக் 3 ம் சுற்றுக்கு முன்னேறினார்

1 mins read
af30c947-2b68-40e4-8177-1387a090a783
-

இங்கிலாந்தின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் வேளையில் முன்னோட்ட சுற்றுகளில் முன்னிலை வகிக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரி‌ஷி சுனக்.

இங்கிலாந்து அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில், இந்திய வம்சாவளிகளான ரிஷி சுனக், சுயெல்லா பிரேவர்மேன், பாகிஸ்தானைப் பூா்விகமாக கொண்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் மற்றும் பென் வேலஸ், பென்னி மோர்டான்ட் உள்பட 11 பேர் போட்டியிடுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், ரிஷி சுனக் உள்பட 6 வேட்பாளர்கள் நேற்று 2-வது சுற்று வாக்குப்பதிவை எதிர்கொண்டனர். இதில் ரிஷி சுனக் 101 வாக்குளை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அட்டர்னி ஜெனரல் சூவெல்லா பிரேவர்மன் 27 வாக்குகளை மட்டுமே பெற்றதால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

3ம் சுற்று வாக்குப்பதிவு அடுத்த வாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுபவரின் பெயா் வரும் செப்டம்பா் மாதம் 5ம் தேதி அறிவிக்கப்படும்.