ராஜபக்சே பதவி விலகியதை கொண்டாடும் இலங்கையர்கள்

ராஜபக்சே பதவி விலகியதை கொண்டாடும் இலங்கையர்கள்

1 mins read
c2eea689-9221-4a5c-aebf-91c7ae29f9aa
படம்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 3

இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே பதவி விலகியதைத் தொடர்ந்து அந்நாட்டு மக்கள் குதூகலத்தில் திளைத்து வருகின்றனர். பட்டாசு கொளுத்தி, வாணவேடிக்கைகள் வெடித்து பலர் தெருக்களில் கொண்டாடி வருகின்றனர். இளையவர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழ்ந்தனர். தலைநகர் கொழும்பில் இரவு முழுவதும் கொண்டாட்டங்கள் தொடர்ந்தன.

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக, நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துவந்த நிலையில், திரு ராஜபக்சே தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

பல மாதங்களாக நீடித்த பொருளியல் நெருக்கடி, தாங்கள் பட்ட அவதிக்கு விடிவுக்காலம் பிறந்திருப்பதாக பலர் கூறினர். திரு ராஜபக்சேவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயும் பதவி விலக கோரி கடந்த சில மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.