சாலை மறியல் சம்பவம்: சிங்கப்பூரைச் சேர்ந்த இருவர் கைது

சாலை மறியல் சம்பவம்: சிங்கப்பூரைச் சேர்ந்த இருவர் கைது

1 mins read
8f12ce50-399d-49a3-817a-a77fcdfe2a5c
படம்: Our Singapore/பேஸ்புக் -

துவாஸ் சோதனை சாவடியில் நடந்த சாலை மறியல் சம்பவத்தின் தொடர்பில் சிங்கப்பூரைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக மலேசிய காவல் துறை தெரிவித்துள்ளது.

துவாஸ் சோதனை சாவடியில் ஒரு சிங்கப்பூர் ஆடவரும் ஒரு பெண்ணும் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டதாக ஜோகூர் காவல் துறையினர் கூறினர்.

முன்னதாக ஒரு வாகனத்தின் உரிமத் தகடை அகற்றி, அதை வாகனத்தின் சன்னல் மீது விட்டெறிந்தவரை மலேசிய காவல் துறையினர் தேடிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

சந்தேக நபர்கள் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்தில் இருந்ததாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட நபர் சிங்கப்பூருக்குள் வந்துகொண்டிருந்தபோது, சாலை தடத்தை மாற்றும்போது சந்தேக நபர்களின் வாகனத்தில் கீறு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அந்த வாகனத்தில் இருந்த ஆண் ஓட்டுநரும் மாதுவும் வாகனத்திலிருந்த வெளியேறி பாதிக்கப்பட்டவரைப் பார்த்து ஆபாச சைகைகள் செய்ததாகவும், கூச்சல் போட்டதாகவும் கூறப்பட்டது. சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் வாகன உரிமத் தகடை அகற்றி அதை வாகன சன்னலில் வீசியதாகத் தெரிகிறது.

இந்தச் சம்பவம் பதிவுசெய்யப்பட்ட காணொளி பரவலாக பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.

காணொளியில் இருந்த பெண்ணின் தனிப்பட்ட விவரங்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூர் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.