மனைவியை கொன்று கொதிக்கும் நீரில் போட்டவர்

மனைவியை கொன்று கொதிக்கும் நீரில் போட்டவர்

1 mins read
e4a49985-1bf2-426e-8cca-9b607f5006ab
படம்: பாகிஸ்தான் ஊடகம் -

பாகிஸ்தானில் ஒருவர் தமது மனைவியைக் கொன்று அவரை ஒரு கொதிக்கும் வெந்நீர் அண்டாவில் போட்டுள்ளார். இந்த கொடூரச் செயலை தனது ஆறு பிள்ளைகளை பார்க்கவும் செய்திருக்கிறார்.

ஒரு தனியார் பள்ளியில் உள்ள சமையல் அறையில் இருந்த அண்டாவில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்தது.

மாண்ட பெண்ணின் கணவர் அந்த பள்ளியில் பாதுகாவலராக வேலை பார்த்ததாகக் கூறப்பட்டது.

குற்றத்தை புரிந்த பிறகு, சந்தேக நபர் தனது மூன்று பிள்ளைகளுடன் அங்கிருந்து தப்பியதாகக் கூறப்பட்டது.

சம்ப இடத்தில் விட்டுசெல்லப்பட்ட மற்ற மூன்று பிள்ளைகளில் ஒரு 15 வயது பெண் காவல் துறையை தொடர்பு கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த மூன்று பிள்ளைகளும் காவல் துறை பாதுகாப்பில் உள்ளனர். ஆடவர் முதலில் தமது மனைவியின் கழுத்தை நெரித்ததாகவும், பின்னர் அவரை கொதிக்கும் நீரில் போட்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாண்டவரின் ஒரு கால் துண்டிக்கப்பட்டிருந்தது.

தமது மனைவியை கள்ள உறவில் ஈடுபட சந்தேக நபர் வலியுறுத்தி வந்ததாகவும், மனைவி அவ்வாறு செய்ய மறுத்ததால் கொல்லப்பட்டதாகவும் காவல் துறையினர் நம்புகின்றனர்.