நுசா டுவா: உக்ரேன்-ரஷ்யா போரினால் ஏற்பட்டுள்ள உணவு, எரிசக்தி விலை உயர்வுக்கு மத்தியில், இதுதொடர்பாக ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்றால், அது குறைந்த வருமான நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தும் என்று இந்தோனீசிய நிதி அமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்திராவதி சொன்னார்.
இந்தோனீசியாவின் பாலித் தீவில் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய அவர், இந்தோனீசியா நேர்மையான இடைதரகராக இருந்து, பொருள்களின் விலை உயர்வு, அனைத்துலக பணவீக்கம், போர் ஆகிய மூன்றுக்கும் தீர்வு காணும் என்று சொன்னார்.
ஏழை நாடுகளை அதிகம் பாதிக்கும் உணவு நெருக்கடியைச் சமாளிக்க இந்த மாநாட்டில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று இந்தோனீசியா சொன்னது.
இதில் ரஷ்யாவின் துணை நிதியமைச்சர் கலந்துகொண்டார். அதன் நிதியமைச்சர் காணொளி வாயிலாக கலந்துகொண்டார்.
ரஷ்ய எண்ணெய் மீதான விலை வரம்பு நிர்ணயத்தை ஆதரிக்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்க நிதி அமைச்சர் யெலன் கடுமையாக அழுத்தம் கொடுத்தார்.
இது, எரிசக்தி விலையைக் குறைக்கவும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தைச் சீராக்கவும் உதவும் என்றார் அவர்.
இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், அது அனைத்துலக அளவில் எண்ணெய் விலை ஏற்றத்திற்கு வழிவகுக்கும் என்றார் இந்தோனீசிய நிதியமைச்சர்.
கடன் நெருக்கடியில் உள்ள நாடுகளுக்கு கடன் நிவாரணம் வழங்குவதற்கு சீனா உட்பட கடன் வழங்கும் ஜி-20 நாடுகளை வலியுறுத்துவது தமது முக்கிய நோக்கங்களில் ஒன்று என்று யெலன் சொன்னார்.
ஜி20 நிதியமைச்சர்கள் மாநாட்டில் இந்தோனீசியா வலியுறுத்து

