பெய்ஜிங்: சீன அதிபர் ஸி ஜின்பிங், பல ஆண்டுகளுக்குப் பிறகு, அந்நாட்டின் ஸின்ஜியாங் பகுதிக்குச் சென்றார்.
மேற்கு வட்டாரத்தின் தலைநகரான உரும்கிக்குச் சென்றிருந்த அவர், கட்சி அமைப்பை வலுப்படுத்தவும் சிறுபான்மை இனத்தவர்கள் உட்பட அனைவரும் பயனடையும் வகையில் சேவை வழங்கவும் அழைப்பு விடுத்ததாக சின்ஹுவா செய்தி கூறியிருந்தது.
செவ்வாய், புதன்கிழமை இரண்டு நாள்கள் அவர் அவ்வட்டாரத்தில் இருந்தார்.
சென்ற 2014ஆம் ஆண்டில் உரும்கியில் உள்ள ரயில் நிலையத்தில் கத்தி, வெடிகுண்டுகள் கொண்டு தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் மூவர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
அப்போது, தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டார்.
அத்துடன் 1 மில்லியன் உய்கர் இனத்தவர்கள், பிற சிறுபான்மையினர்களை அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன அரசாங்கம் தடுப்பு முகாம்களில் வைத்தது.

