கராச்சி: பாகிஸ்தானில் ஒருவர் தமது மனைவியைக் கொன்று அவரை கொதிக்கும் வெந்நீர் அண்டாவில் போட்டுள்ளார். இந்த கொடூரச் செயலை தனது ஆறு பிள்ளைகளைப் பார்க்கவும் செய்திருக்கிறார்.
தனியார் பள்ளி ஒன்றின் சமையல் அறையில் பெண் ணின் உடல் இருந்ததாக காவல்துறை தெரிவித்தது.
மாண்ட பெண்ணின் கணவர் அந்த பள்ளியில் பாதுகாவலராக வேலை பார்த்ததாகக் கூறப்பட்டது.
குற்றத்தைப் புரிந்த பிறகு, சந்தேக நபர் தனது மூன்று பிள்ளைகளுடன் அங்கிருந்து தப்பியதாகக் கூறப்பட்டது.
சம்பவ இடத்தில் விட்டுசெல்லப்பட்ட மற்ற மூன்று பிள்ளைகளில் ஒருவரான 15 வயது பெண் காவல்துறையைத் தொடர்பு கொண்டார்.
தமது மனைவியை கள்ள உறவில் ஈடுபட சந்தேக நபர் வலியுறுத்தி வந்ததாகவும் மனைவி அவ்வாறு செய்ய மறுத்ததால் கொல்லப்பட்டதாகவும் காவல் துறையினர் நம்புகின்றனர்.

