டிரம்ப்பின் வளர்ச்சிக்கு உதவிய முதல் மனைவி இவானா மரணம்

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வின் முன்­னாள் அதி­பர் டோனல்ட் டிரம்­பின் வளர்ச்­சிக்கு உறு­து­ணை­யாக இருந்த அவ­ரது முதல் மனைவி இவானா (படம்), 73, உயிரிழந்தார்.

வியாழக்கிழமையன்று அவ­சர உதவி எண்­ணிற்கு வந்த அழைப்­பைத் தொடர்ந்து, நியூ­யார்க் நகர காவல்­து­றை­யி­னர் இவா­னா­வின் இல்­லத்­திற்­குச் சென்­ற­னர்.

அங்கு இவானா சுய­நி­னை­வின்றி கிடந்­த­தா­க­வும் அவரை மீட்டு மருத்­து­வ­மனை­யில் சேர்த்­த­போது அவர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக மருத்­து­வர்­கள் சொன்னதாக­வும் அவர்கள் கூறி­னர்.

ஆரம்ப கால­கட்­டத்­தில், டிரம்ப் பிர­பல தொழி­ல­தி­ப­ராக இருந்­த­போது, இவா­னா­வும் தொழில்­களில் பங்­கெ­டுத்து டிரம்ப்­பின் தொழில் வளர்ச்­சிக்கு உறு­து­ணை­யாக நின்­றார்.

விவா­க­ரத்து ஆன பிற­கும், டிரம்ப் அதி­பர் பத­விக்­குப் போட்­டி­யிட்­ட­போது, இவானா அவ­ருக்கு ஆத­ர­வாக இருந்து ஆலோ­ச­னை­கள் வழங்­கி­னார்.

1977ஆம் ஆண்­டில் திரு­ம­ணம் செய்­து­கொண்ட இவர்­க­ளுக்கு டிரம்ப் ஜுனி­யர், இவாங்கா, எரிக் ஆகிய மூன்று பிள்­ளை­கள் உள்­ள­னர். 1992ல் இவர்­க­ளுக்கு விவா­க­ரத்து ஆனது.

அதன் பிறகு, டிரம்ப் ஹாலி­வுட் நடி­கை­யான மர்லா மப்­லே­சைத் திரு­ம­ணம் செய்­தார். அவ­ரை­யும் விவா­க­ரத்து செய்த டிரம்ப், 2005ஆம் ஆண்டு மெலே­னி­யாவை மூன்­றா­வது திரு­ம­ணம் செய்­து­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!