பிரதமருக்கான போட்டியில் தொடர்ந்து முன்னேறும் ரி‌ஷி சுனக்

பிரதமருக்கான போட்டியில் தொடர்ந்து முன்னேறும் ரி‌ஷி சுனக்

1 mins read
cc9e6ac0-7ebc-49f9-b08d-fc63716d137e
-

லண்­டன்: இங்­கி­லாந்­தின் அடுத்த பிர­த­ம­ரைத் தேர்ந்­தெ­டுப்­ப­தற்­கான பணி­கள் மும்­ம­ர­மாக நடை­பெற்று வரும் வேளை­யில், முன்­னோட்ட சுற்­று­களில் முன்­னிலை வகிக்­கி­றார் இந்­திய வம்­சா­வ­ளி­யைச் சேர்ந்த ரி‌ஷி சுனக்.

இங்­கி­லாந்து அர­சி­ய­ல­மைப்பு பாரம்பரியப்படி, ஆளும் கட்சி தலை­வ­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­ப­வரே பிர­த­ம­ரா­க­வும் பத­வி­யேற்­பார். அந்த வகை­யில் கன்­சர்­வேட்­டிவ் கட்­சி­யின் தலை­வர் பத­விக்­கான தேர்­தல் நடை­பெற்று வரு­கிறது.

இதில், இந்­திய வம்­சா­வ­ளி­க­ளான ரிஷி சுனக், சுயெல்லா பிரே­வர்­மேன், பாகிஸ்­தா­னைப் பூா்விக­மாக கொண்ட முன்­னாள் சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் சஜித் ஜாவித், பென் வேலஸ், பென்னி மோர்­டான்ட் உள்­பட 11 பேர் போட்­டி­யி­டு­வ­தாக அறி­வித்­த­னர்.

இந்­நி­லை­யில், ரிஷி சுனக் உள்­பட 6 வேட்­பா­ளர்­கள் நேற்று 2வது சுற்று வாக்­குப்­ப­திவை எதிர்­கொண்­ட­னர்.

இதில் ரிஷி சுனக் 101 வாக்­கு­ளைப் பெற்று அடுத்த சுற்­றுக்கு முன்­னே­றி­னார். இந்­திய வம்­சா­வ­ளியை சேர்ந்த அட்­டர்னி ஜென­ரல் சூவெல்லா பிரே­வர்­மன் 27 வாக்­கு­களை மட்­டுமே பெற்­ற­தால் போட்­டி­யில் இருந்து வெளி­யேற்­றப்­பட்­டார்.

3ஆம் சுற்று வாக்­குப்­ப­திவு அடுத்த வாரம் நடை­பெ­றும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. புதிய பிர­த­ம­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­ப­வ­ரின் பெயா் வரும் செப்­டம்பா் மாதம் 5ஆம் தேதி அறி­விக்­கப்­படும்.