இன்முகத்தோடு வேலை செய்யவில்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை

இன்முகத்தோடு வேலை செய்யவில்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை

1 mins read
038f31fe-7aac-4c3c-988d-a747358137c9
-

மணிலா: பிலிப்­பீன்ஸ் நக­ராட்சி ஒன்­றின் ஊழி­யர்­கள் பொது­மக்­க­ளி­டம் முகம் சுளிக்­கா­மல் இன்­முகத்­தோ­டும் புன்­ன­கை­யோ­டும் சேவை செய்­ய­வேண்­டும் என்று அந்­நாட்­டின் மேயர் ஒரு­வர் சட்ட ஆணை பிறப்­பித்­துள்­ளார்.

புன்­ன­கைத்­தப்­படி வேலை செய்­யாத ஊழி­யர்­கள்­மீது ஒழுங்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் அது அவர்­க­ளு­டைய ஆண்டு மதிப்­பாய்­வைப் பாதிக்­கும் என்­றும் அந்த ஆணை கூறு­கிறது.

அண்­மை­யில் நடந்து முடிந்த தேர்­த­லில் வடக்கு பிலிப்­பீன்­சில் உள்ள முலானே நக­ரத்­தின் மேய­ராக பொறுப்­பேற்­றுள்ள அரிஸ்­டோட்­டல் அக்­வா­யர், இந்த ஆணையை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

தேர்­தல் பிர­சா­ரத்­தின்­போது அவர் இதை வாக்­கு­று­தி­யா­கவே அளித்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

"நக­ராட்சி ஊழி­யர்­கள் இனி முகம் சுளிக்­கக்­கூ­டாது," என்று அவர் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்டு இருந்­தார்.

அர­சாங்க ஊழி­யர்­கள் முகம்­சுளிப்­பது குறித்து பொது­மக்­க­ளி­டம் அதி­ருப்தி நிலவியதாக அவர் சொன்­னார்.

இந்த ஆணையை முலானே நகர மக்­கள் வர­வேற்­றுள்­ள­னர். இது­பற்றி நக­ராட்சி ஊழி­யர்­கள் என்ன நினைக்­கி­றார்­கள் என்­பது பற்றி எந்­தத் தக­வ­லும் இல்லை.

இருப்­பி­னும், இதற்கு சற்று எதிர்ப்பு இருக்­கும் என்று தாம் எதிர்­பார்ப்­ப­தாக மேயர் அக்­வா­யர் கூறி­னார்.