'தடுப்பூசி போடும் விகிதம் குறைவது ஆபத்து'

'தடுப்பூசி போடும் விகிதம் குறைவது ஆபத்து'

1 mins read
acdc48b2-f2d5-4aec-854c-23ad4a2bef16
-

நியூ­யார்க்: உல­க­ள­வில் குழந்­தை­க­ளுக்­கான தடுப்­பூசி போடும் விகி­தம் பெரு­ம­ளவு சரிவு கண்­டுள்­ள­தாக ஐநா கூறி­யுள்­ளது.

இதற்கு கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லால் விநி­யோக சங்­கி­லி­யில் ஏற்­பட்ட இடை­யூ­றும், தடுப்­பூசி பற்­றிய தவ­றான தக­வல்­க­ளுமே கார­ணம் என்­றும் அது சொன்­னது.

டிப்­தீ­ரியா, டெட்­ட­னஸ், பெர்­டு­சிஸ் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ராக மூன்று தவணை ­த­டுப்­பூ­சியை போட்­டுக்­கொண்ட குழந்­தை­க­ளின் விழுக்­காடு 2019-2021க்கு இடை­யில் ஐந்து விழுக்­காடு குறைந்­து­விட்­ட­தாக உல­கச் சுகா­தார நிறு­வ­னம் சொன்­னது. 2021ல் கிட்­டத்­தட்ட 25 மில்­லி­யன் பிள்­ளை­களும் 2020ல் ஏறத்­தாழ இரண்டு மில்­லி­யன் பிள்­ளை­களும் 2019ல் ஆறு மில்­லி­யன் பிள்­ளை­களும் முத்­த­டுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை. இவர்­களில் 18 மில்­லி­யன் ஒரு முறை­கூட ­த­டுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை.

இத­னால் பிள்­ளை­கள், தடுப்­பூ­சி­யால் தடுக்­கக்­கூ­டிய நோய்­க­ளுக்கு எளி­தில் ஆளாகும் ஆபத்து அதிகம் என்­றும் அது எச்­ச­ரித்­து உள்­ளது. படம்: ராய்­ட­டர்ஸ்