உக்ரேன்-ர‌‌ஷ்யா போர்: டினிப்ரோ நகரம் மீதான தாக்குதலில் 3 பேர் பலி, 15 பேர் காயம்

உக்ரேன்-ர‌‌ஷ்யா போர்: டினிப்ரோ நகரம் மீதான தாக்குதலில் 3 பேர் பலி, 15 பேர் காயம்

1 mins read
4468c7f8-95fa-4f98-a1ef-f084d99ba611
படங்கள்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 4

உக்ரேனின் டினிப்ரோ நகர் மீது ர‌ஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

உக்ரேன் மீது ர‌ஷ்யா தாக்குதல் தொடங்கி 5 மாதத்தை நெருங்கினாலும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

ர‌ஷ்யாவின் மும்முனை தாக்குதலுக்கு உக்ரேனின் பெரும்பாலான நகரங்கள் நாசமாகிவிட்டன.

ஆனாலும் உக்ரேன் வீரர்கள் எதிர்த்துப் போரிட்டு வருவதால் இன்னும் சில நகரங்களைப் பிடிக்க முடியாமல் ர‌ஷ்யா திணறி வருகிறது.

இந்நிலையில், உக்ரேனின் டினிப்ரோ நகரை ர‌ஷ்யா குறி வைத்துள்ளது.