உள்கட்சி பூசல் குறித்து அன்வார் எச்சரிக்கை

உள்கட்சி பூசல் குறித்து அன்வார் எச்சரிக்கை

2 mins read
728f330a-47ad-4876-9cb4-55a64192efa2
பிகேஆர் கட்சியின் வருடாந்திர தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் நேற்று பேசினார் திரு அன்வார் இப்ராகிம். படம்: பெர்னாமா -

ஷா ஆலம்: மலே­சி­யா­வின் பிகே­ஆர் கட்­சி­யில் உள்­கட்சி பூசலை ஏற்­ப­டுத்­தும் தலை­வர், மலே­சிய பொதுத் தேர்­த­லுக்­கான வேட்­பு­மனுத் தாக்­கல் பட்­டி­ய­லில் இருந்து நீக்­கப்­ப­டு­வார் என்று எதிர்க்­கட்­சித் தலை­வர் அன்­வார் இப்­ரா­கிம் எச்­ச­ரித்­துள்­ளார். மலே­சி­யா­வில் பொதுத் தேர்­தல் இன்­னும் ஓராண்­டுக்­குள் நடத்­தப்­பட இருக்­கிறது.

பிகே­ஆர் கட்­சி­யின் வரு­டாந்­திர தேசிய காங்­கி­ரஸ் கூட்­டத்­தில் நேற்று பேசிய திரு அன்­வார், "கட்சி­யில் பிளவை ஏற்­ப­டுத்­தும் எவ­ராக இருந்­தா­லும், அவரை நான் மன்­னிக்க மாட்­டேன்.

பிளவை ஏற்­ப­டுத்­து­வ­திலே அவர்­கள் குறி­யாக இருந்­தால், பொதுத் தேர்­த­லில் அவர்­கள் வேட்­பா­ளர்­களாக நிறுத்­தப்­பட மாட்டார்கள்," என்று உறு­தி­ப­டக் கூறி­னார்.

கடந்த மே மாதம் நடந்த பிகே­ஆர் கட்­சித் தேர்­த­லில் திரு அன்­வார் போட்­டி­யின்றி மீண்­டும் அதன் தலை­வ­ராக தேர்வு செய்­யப்­பட்­டார்.

திரு அன்­வா­ரும் அவர் தலைமை தாங்­கும் பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணி­யும் மற்ற கட்­சி­க­ளு­டன் சேர்ந்து பர­வ­லாக தொடர்ந்து ஒத்துழைப்பை நாட வேண்­டுமா என்­பது குறித்து பிகே­ஆர் கட்­சிக்­குள் மாறு­பட்ட கருத்­து­கள் நில­வு­கின்­றன.

இந்­நி­லை­யில், "நான்­தான் பிகே­ஆர் கட்­சித் தலை­வர், பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணித் தலை­வர். அதே­வே­ளை­யில், மலே­சிய நாடாளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் நானே," என்று திரு அன்­வார் கூட்­டத்­தில் நினை­வு­ப­டுத்­தி­னார்.

மலே­சி­யா­வின் 15வது பொதுத் தேர்­த­லில் தேசிய முன்­ன­ணிக் கூட்­டணி வாகை சூடு­வ­தைத் தடுக்க திரு அன்­வார் திட்­டம் தீட்டி வரு­கி­றார்.

கடந்த ஆண்டு நவம்பர், இந்த ஆண்டு மார்ச் மாதங்களில் நடந்து முடிந்த மலாக்கா, ஜோகூர் சட்­ட­மன்­றத் தேர்­தல்­களில் தேசிய முன்­ன­ணிக் கூட்­டணி பெரும்­பான்மை வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற்­றி­ருந்­தது.