இந்தோனீசியாவின் பாப்புவா பகுதியில் 9 பேர் சுட்டுக்கொலை

இந்தோனீசியாவின் பாப்புவா பகுதியில் 9 பேர் சுட்டுக்கொலை

1 mins read
f7a26002-3526-4a9a-97e8-af6e33ae56ad
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வின் கிழக்­குப் பகு­தி­யான பாப்­பு­வா­வில் நேற்­றுக் காலை நடந்த துப்­பாக்­கிச்­சூட்­டில் ஒன்­பது பேர் கொல்­லப்­பட்­ட­னர்.

ஆயு­தம் ஏந்­திய பிரி­வி­னை­வாதிகள் சிலர் இந்­தத் துப்­பாக்கிச்­சூட்டை நடத்­தி­ய­தாக நம்­பப்­படு­கிறது என்று காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

அண்­மைய ஆண்­டு­களில் ஆக மோச­மா­ன­தா­கக் கூறப்­படும் இந்தத் துப்­பாக்­கிச்­சூடு, டுகா எனும் தொலை­தூ­ரப் பகு­தி­யில் நடந்­த­தாக பாப்­புவா மாநி­லத் தலை­ந­கர் ஜெய­பு­ரா­வில் உள்­ளூர் ஊட­கங்­க­ளி­டம் காவல்­துறை கூறி­யது.

இந்­தச் சம்­ப­வம் குறித்து விசா­ரணை மேற்­கொண்டு வரும் அதி­கா­ரி­கள், குடி­யி­ருப்­பா­ளர்­க­ளைப் பாது­காப்­பாக வெளி­யேற்­றும் பணி­யில் கவ­னம் செலுத்­தி­னர்.

பாப்­புவா வட்­டா­ரம் தற்­போ­தைய இரண்­டி­லி­ருந்து ஐந்து மாநி­லங்­களா­கப் பிரிக்­கப்­படும் என்று புதிய சட்­டம் ஒன்று இயற்­றப்­பட்­ட­தற்கு எதிர்ப்பு தெரி­விக்­கும் வகை­யில் ஆர்ப்­பாட்­டங்­கள் எழுந்­துள்­ள­தைத் தொடர்ந்து இந்­தத் துப்­பாக்­கிச்­சூடு நடந்­தது.

எனி­னும் வளங்­கள் நிறைந்த பகு­தி­யான பாப்­பு­வா­வின் கட்­டுப்­பாட்­டில் இந்த நட­வ­டிக்கை இந்­தோ­னீ­சி­யா­வுக்­குக் கூடு­தல் அதி­கா­ரத்தை வழங்­கும் என்று விமர்­சகர்­கள் கரு­து­கின்­ற­னர்.