சான் ஃபிரான்சிஸ்கோ விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சான் ஃபிரான்சிஸ்கோ விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

1 mins read
b1cca2c8-e7ba-48d5-bdee-d4b3f8318454
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் விமான நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். படம்: ராய்ட்டர்ஸ் -

சான் ஃபிரான்­சிஸ்கோ: சான் ஃபிரான்­சிஸ்கோ அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் நேற்று முன்­தி­னம் இரவு வெடி­குண்டு மிரட்­டல் விடுக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து, அனைத்­து­லக முனை­யத்­தில் இருந்து பய­ணி­கள், பணி­யா­ளர்­கள் என அனை­வ­ரும் வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

அதை­ய­டுத்து, காவல்­து­றை­யினர் மேற்­கொண்ட சோத­னை­யில் சந்­தே­கத்­திற்­கு­ரிய வகை­யில் எதுவும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என உறுதி செய்­யப்­பட்ட பிறகு, அனைத்­து­லக முனை­யம் அதன் செயல்­பாடு­க­ளைத் தொடர்ந்­தது.

எனினும், செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதால் அவற்றில் தாமதங்களை எதிர்பார்க்கலாம் என்று விமான நிலைய நிர்வாகம் குறிப்பிட்டது.

விமான நிலை­யம் அதன் ஏர்­டி­ரெய்ன் சேவை­யைத் தொடர்ந்­த­தாக தெரி­வித்­தது. பே ஏரியா பகு­தி­யில் உள்ள விரைவு ரயில் சேவை உள்ளூர் நேரப்­படி காலை 6.25 மணிக்­குத் தொடங்­கி­யது.

முன்­ன­தாக, விமான நிலை­யத்­திற்கு வெடி­குண்டு மிரட்­டல் விடுக்­கப்­பட்­ட­தன் தொடர்­பில் காவல்­துறைக்­குத் தக­வல் கிடைத்­தது. அதை­ய­டுத்து விசா­ரணை மேற்­கொண்ட அதி­கா­ரி­கள், சந்­தே­கத்­திற்­கு­ரிய பொட்­ட­லம் ஒன்­றைக் கண்­டு­பி­டித்­த­னர்.

விசா­ர­ணை­யின் முடி­வில் ஆடவர் ஒரு­வ­ரைக் கைது செய்த அதி­கா­ரி­கள், அவ­ரைத் தடுப்­புக்­காவலில் வைத்துள்­ள­தாக ஏபி செய்தி நிறு­வனம் தெரி­வித்­தது.