குரங்கம்மை தடுப்பூசி தேவை: தடுமாறும் அமெரிக்கா

குரங்கம்மை தடுப்பூசி தேவை: தடுமாறும் அமெரிக்கா

1 mins read
766193e4-0f8d-4413-8ee5-a0aaed355b4e
நியூயார்க்கில் குரங்கம்மை தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளும் ஆடவர் ஒருவர். படம்: ராய்ட்டர்ஸ் -

வாஷிங்­டன்: வரும் வாரங்­களில் குரங்­கம்மை தொற்று அதி­க­ரிக்­கும் என்­பதை எதிர்­பார்க்­கும் அமெ­ரிக்­கா­வி­டம் தற்­போது போது­மான அளவு தடுப்­பூ­சி­கள் இல்லை என்று உயர்­மட்ட சுகா­தார அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­து உள்­ளார். அமெ­ரிக்­கா­வில் குரங்­கம்மை தொற்று பர­வும் மையப்­ப­கு­தி­யாக நியூ­யார்க் உரு­வெ­டுத்­துள்­ளது. ஜூலை 14ஆம் தேதி நில­வ­ரப்­படி, அங்கு கிட்­டத்­தட்ட 390 பேரி­டம் குரங்­கம்மை தொற்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்கா முழு­வ­தும் இது­வரை 1,470 பேரி­டம் குரங்­கம்மை தொற்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

கடந்த மே மாதம் அமெ­ரிக்­கா­வில் குரங்­கம்மை தொற்று பரவல் தொடங்­கி­ய­போது, ஏறக்­கு­றைய 2,000 தடுப்­பூசி அளவு மட்டுமே கையி­ருப்­பில் இருந்­தது.

பின்­னர் நாடு முழு­வ­தும் 156,000க்கும் மேற்­பட்ட தடுப்­பூசி அளவு விநி­யோ­கம் செய்­யப்­பட்­டு உள்­ளது. தேசிய கையி­ருப்­பில் 130,000க்கும் மேற்­பட்ட தடுப்­பூசி அளவு சேர்க்­கப்­பட்­டுள்­ளது. நாளை அவை விநி­யோ­கிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அடுத்த சுற்று தடுப்­பூசி விநி­யோ­கம், குரங்­கம்­மை­யால் மிக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள பகு­தி­களில் கவ­னம் செலுத்­தும் என அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.