இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனம்

இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனம்

1 mins read
5fe0f70c-d7e9-45e6-a644-d363cb6260a7
படம்: ஏஃபி -

இலங்கையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு இதனை அறிவித்தார். நாட்டில் நிலவும் ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டு வரவும், பொருளியல் நெருக்கடிக்குத் தீர்வு காணவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொது ஒழுங்கை கட்டிக்காக்க, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, அத்தியாவசியப் பொருள்களின் விநியோகத்திலும், சேவைகளிலும் தடங்கல் ஏற்படாமல் இருக்க இவ்வாறு செய்யப்படுவதாக அரசாங்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கையில் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் வலுவடையும் போதெல்லாம், நெக்கடிநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் பலமுறை அவ்வாறு செய்யப்பட்டுள்ளது. சென்ற வாரம் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே நாட்டைவிட்டு தப்பியோடியதைத் தொடர்ந்து அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

அவசரநிலையை அறிவிப்பது இலங்கை அரசாங்கத்தின் வழக்கமான உத்தியாகிவிட்டது. இது எந்த வகையிலும் பயனளிக்காது என்பது நிரூபணமாகியுள்ளது என்று அரசியல் கவனிப்பாளர்க்ள் கருத்துரைத்துள்ளனர்.