உக்ரேன் ஆயுதங்களை அழிக்க ர‌ஷ்யா திட்டம்

உக்ரேன் ஆயுதங்களை அழிக்க ர‌ஷ்யா திட்டம்

2 mins read
09c879cb-53ec-4807-b4ac-c5f8c22c45fa
-

மாஸ்கோ: ர‌ஷ்­யா­வுக்கு எதி­ரான தாக்­கு­தல்­க­ளுக்கு உக்­ரேன் மேற்­கத்­திய நாடு­களில் இருந்து அனுப்­பப்­பட்ட ஆயு­தங்­க­ளைப் பயன்­படுத்து­கிறது. எனவே, உக்­ரே­னின் நீண்ட தூர இலக்கை தாக்கி அழிக்­கும் ஏவு­க­ணை­க­ளைக் குறி­வைத்து தாக்கி அழிக்க, ர‌ஷ்ய தற்­காப்பு அமைச்­சர் செர்ஜி சோயிகு உத்­த­ர­விட்­டுள்­ளார்.

ர‌ஷ்­யக் கட்­டுப்­பாட்­டில் உள்ள குடி­யி­ருப்­புப் பகு­தி­களை அழிப்­பதற்கு உக்­ரேன் அந்த ஆயு­தங்­க­ளைப் பயன்­ப­டுத்­தி­ய­தா­க­வும் மேலும் வயல்­கள், தானியக் கிடங்கு

­க­ளை­யும் உக்­ரேன் படை தீ வைத்து அழித்­து­விட்­ட­தா­க­வும் ர‌ஷ்­யத் தற்­காப்பு அமைச்சு சொன்­னது.

ர‌ஷ்­யா­வுக்கு எதி­ராக அமெ­ரிக்­கா­வும் அதன் நட்பு நாடு­களும் பல பில்­லி­யன் டாலர் மதிப்­பி­லான ஆயு­தங்­களை உக்­ரே­னுக்கு வழங்கி வரு­கின்­றன.

அவற்­றைக் கொண்டு ர‌ஷ்­யா­வின் 30 ஆயுத கிடங்குகள்­மீது தொடர் தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­தாக உக்­ரேன் சொன்­னது.

ர‌ஷ்­யப் படை­யெ­டுப்பு தொடங்கி கிட்­டத்­தட்ட ஐந்து மாதங்­க­ளா கின்றன. இந்­நி­லை­யில், உக்­ரே­னின் ஐந்­தில் ஒரு பங்கு பகுதி ர‌ஷ்­யா­வின் கட்­டுப்­பாட்­டில் உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. டோன்­பாஸ் பகு­தியை கைப்­பற்­றுவதில் ர‌ஷ்யா தீவிரமாக உள்ளது.

இதற்­கி­டையே, உக்­ரே­னின் இரண்டு முக்­கிய உயர் அதி­காரி­களைப் அந்­நாட்டு அதி­பர் ஸெலன்ஸ்கி பதவி நீக்­கி­யுள்­ளார். தங்­கள் துறை­யில் இருந்து ர‌ஷ்ய உள­வா­ளி­களை வேர­றுக்க அவர்­கள் தவ­றி­விட்­ட­தாக ஸெலன்ஸ்கி சொன்­னார்.

எஸ்­பியூ எனும் பாது­காப்பு அமைப்­பின் தலை­வர் இவான் பகா­னோவ்­வும் திரு­வாட்டி இரினா வெனி­டிக்­டோ­வா­வை­யும் அவர் நீக்­கி­யுள்­ளார்.

"இரண்டு துறை­க­ளை­யும் சேர்ந்த கிட்­டத்­தட்ட 60 பேர் ர‌ஷ்ய ஆக்­கி­ர­மிப்­புப் பகு­தி­களில் உக்­ரே­னுக்கு எதி­ராக வேலை செய்­த­னர்.

"சட்ட அம­லாக்க அதி­கா­ரி­கள்­மீது 651 தேசத் துரோக வழக்­கு­கள் போடப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார். இது­போன்ற குற்­றங்­கள் நாட்­டின் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­தல் மிக்­கது. "இதற்கு அந்­தந்த துறை­க­ளின் அதி­கா­ரி­களே பொறுப்­பா­வர்," என்­றார் ஸெலன்ஸ்கி.