ஜகார்த்தா: இந்தோனீசியாவில்
10 பேர் கொல்லப்பட்டதற்கு அந்நாட்டின் பப்புவா பகுதி பிரிவினைவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
கொல்லப்பட்டவர்கள் தங்களைப் படமெடுத்ததாகவும் அதுபற்றி கேள்வி கேட்டபோது சண்டையிட்டதாகவும் பிரிவினைவாத அமைப்பு சொன்னது. அவர்கள் இந்தோனீசிய அரசாங்கத்திற்கு உளவாளிகளாக செயல்பட்டதாகவும் அது சொன்னது.
டிரக்கில் சென்று கொண்டிருந்தவர்களைச் சென்ற சனிக்கிழமையன்று ஆயுதமேந்திய சிலர் கொன்றனர்.
அப்பகுதியில் இருப்பவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறவில்லை என்றால், கொல்லப்படுவார்கள் என்றும் அது எச்சரித்துள்ளது.

