பிரபல மருத்துவரான டாக்டர் மதன் கடாரியா 1995ஆம் ஆண்டில் தொடங்கிய சிரிப்பு மன்றம் படிப்படியாக மாற்றம் கண்டு இப்போது சிரிப்பு யோகாவாக உலகம் முழுவதும் பிரபலமடைந்து உள்ளது.
யோகாசனக் கலையில் உள்ள சில பயிற்சி முறைகளையும் சிரிப்பையும் கலந்து 'சிரிப்பு யோகா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் பங்கேற்போர் நகைச்சுவையை கேட்காமலேயே, தங்கள் கவலைகளை மறந்து வாய்விட்டு சிரிக்கிறார்கள்.
படத்தில், இந்தோனீசியாவின் பாலித் தீவில் உள்ள உபுட் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த 'சிரிப்பு யோகா' நிகழ்ச்சியில் 5,000 பேர் கலந்துகொண்டனர்.
படம்: ஏஎஃப்பி

