குரங்கம்மைத் தடுப்பூசி: ஏழு நிமிடங்களில் 9,200 முன்பதிவுகள்

குரங்கம்மைத் தடுப்பூசி: ஏழு நிமிடங்களில் 9,200 முன்பதிவுகள்

1 mins read
2ef05e25-9b7b-40d6-a3ad-a8815c7f4839
-

நியூ­யார்க்: அமெ­ரிக்காவில் குரங்­கம்மை சம்­ப­வங்­கள் அதி­க­மாக பதி­வா­கும் நியூ­யார்க் நக­ரில், மக்­கள் அதிக ஆர்­வத்­து­டன் தடுப்­பூசி போட்­டுக்கொள்ள முன்­வ­ந்தனர்.

இந்த தடுப்­பூ­சிக்­காக கிட்­டத்­தட்ட 9,200 முன்­ப­தி­வு­கள் வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று திறக்­கப்­பட்­டன. அவை அனைத்­தும் ஏழு நிமி­டங்­களில் முன்­ப­திவு செய்­யப்­பட்­டு­விட்­டன. மூன்று நாள்­க­ளுக்கு முன்பு அதி­க­மா­னோர் அந்த இணை­யப்­பக்­கத்தை மொய்த்­த­தால் அது சீர்­கு­லைந்­தது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தற்­காக ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று ப்ரூக்­ளின் நகர பள்­ளி­யொன்­றில் அவர்­கள் வரிசை கட்டி நின்­ற­னர். பெரும்­பா­லா­ன­வர்­கள் 20 முதல் 40 வயதுக்கு உட்­பட்­ட­ ஆண்கள் என்று கூறப்­ப­டு­கிறது.

தடுப்­பூ­சிக்­கான முன்­ப­திவு கிடைத்­ததை அதிர்­‌ஷ்­ட­மாக கரு­து­வ­தாக அவர்­களில் பலர் கூறி­னர்.

நியூ­யார்க் நக­ரில் சென்ற திங்­கட்­கி­ழ­மை­யன்று 223ஆக இருந்த குரங்­கம்மை சம்­ப­வங்­கள், வெள்ளிக்­கி­ழ­மை­யன்று 461 ஆனது.

அமெ­ரிக்­கா­வில் மே மாதம் முதல் குரங்­கம்மை சம்­ப­வம் கண்­டறி­யப்­பட்­டது.