தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

10,000 மீட்டர் ஓட்டம்: உகாண்டாவுக்குத் தங்கம்

1 mins read
dcb702d0-5b59-4cb3-81ab-91ccf1979fdd
-

வா‌ஷிங்டன்: உலக சாம்பியன்‌ஷிப் திடல்தடப் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உகாண்டாவின் ஸ்டீபன் செப்டேகி தங்கப் பதக்கம் வென்றார். இவர் பந்தய தூரத்தை 27 நிமிடம் 27.43 வினாடிகளில் கடந்தார்.

27 நிமிடம் 27.90 வினாடிகள் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்றார் கென்யாவின் ஸ்டேன்லி வைத்தகா ப்ரூ. மற்றோர் உகாண்டா வீரர் வெண்கலம் வென்றார்.

பெண்களுக்கான சுத்தியல் எரியும் போட்டியில் அமெரிக்காவின் ப்ரூப் ஆண்டர்சன் தங்கம் வென்றார். இவ்வாண்டு அமெரிக்கா வென்றுள்ள 3வது தங்கம் இது.

8 கி.மீட்டர் மாரத்தான் எனும் நெட்டோட்டப் போட்டியில் எத்தியோப்பியாவின் டோலா தங்கப் பதக்கம் வென்றார். இவர் 2 மணி 5 நிமிடம் 37 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தார்.