சட்டசபை தேர்தலில் இம்ரான் கான் வெற்றி

சட்டசபை தேர்தலில் இம்ரான் கான் வெற்றி

1 mins read
9f8ea668-eb18-47a3-a4c7-0b823431328a
-

லாகூர்: பாகிஸ்­தா­னில் பஞ்­சாப் மாநி­லத்­தில் நடை­பெற்ற சட்­ட­சபை தேர்­த­லில் அந்­நாட்­டின் முன்­னாள் பிர­த­மர் இம்­ரான் கானின் பிடிஐ கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்­றது. இதை­ய­டுத்து நாடா­ளு­மன்­றத் தேர்­தலை முன்­கூட்­டியே நடத்த இம்­ரான் கான் அழைப்பு விடுத்து உள்­ளார். நாடா­ளு­மன்­றத் தேர்­தல் அடுத்த ஆண்டு அக்­டோ­பர் மாதம் நடை­பெ­றக்­கூ­டும்.

ஏப்­ரல் மாதம் கொண்டு வரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மா­னத்­தில் தோற்­ற­தை­ய­டுத்து, அவர் பிர­த­மர் பத­வி­யில் இருந்து விலக நேரிட்­டது. எனவே, இத்­தேர்­தல், இம்­ரான் கான் மீதான மக்­க­ளின் நம்­பிக்கை பற்­றிய சோத­னை­யாக பார்க்­கப்­பட்­டது. பஞ்­சாப் சட்­ட­ச­பை­யின் 20 இடங்­க­ளுக்­கான தேர்­தலில் இம்­ரான் கான் கட்சி

15 இடங்­க­ளைக் கைப்­பற்­றி­யது. பாகிஸ்­தான் முஸ்­லிம் கட்சி

4 இடங்­களை வென்­றது.