மில்லியன் கணக்கான மதிப்புள்ள நகைகள் கொள்ளை

மில்லியன் கணக்கான மதிப்புள்ள நகைகள் கொள்ளை

1 mins read
89233fb2-7d60-4d38-a7df-a67eb3e975fb
இதுபோன்ற ஒரு கவசவாகனத்திலிருந்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன (படம்: ஏபி) -

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஒரு கவச வாகனத்திலிருந்து மில்லியன் கணக்கான மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. வாகனத்தில் குறைந்தது 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள நகைகளும், ரத்தினக் கற்களும் இருந்ததாகக் கூறப்பட்டது.

வாகனத்தை நிறுத்தி பாதுகாப்பு அதிகாரிகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, நகைகள் சூறையாடப்பட்டன.

சான் ஃபிரான்சிஸ்கோவில் இடம்பெற்ற ஆபரணக் கண்காட்சியில் நகைகள் வைக்கப்பட்டிருந்தன. நகைகளை மீண்டும் கலிஃபோர்னியாவுக்கு கொண்டுவரும்போது, திருட்டு நடந்துள்ளது. ஓய்வு எடுப்பதற்காக பாதுகாப்பு அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தியபோது, வாகனத்தின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. திருடர்கள் கவச வாகனத்தை இரவு முழுவதும் பின்தொடர்ந்து வந்தனரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று காவல் துறையினர் கூறினர். இந்த திருட்டு தொடர்பில் பலர் சந்தேகிக்கப்படுவதாக காவல் துறையினர் குறிப்பிட்டனர்.