பிரிட்டனில் முதல்முறையாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை

பிரிட்டனில் முதல்முறையாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை

1 mins read
2fd9053a-7aca-481e-8a4a-f63bc44b39fc
-

லண்டன்: பிரிட்டனில் முதல்முறையாக நேற்று வெப்பநிலை 40 டிகிரி செல்சியசைக் கடந்ததாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

லண்டன் ஹீத்ரோவில் நேற்று வெப்பநிலை 40.2 டிகிரி செல்சியசாக பதிவானது. வெப்பநிலை இதைவிடவும் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அங்கு அதிக வெப்பநிலை காரணமாக விமான ஓடுபாதைகள், ரயில் தடங்கள் சேதமடைந்தன. இதனால், பொது போக்குவரத்தை வழக்கம் போல் இயக்குவதில் சவால்கள் ஏற்பட்டுள்ளன.

அதிகரிக்கும் வெப்பநிலையை சமாளிக்கும் வகையில் பிரிட்டன் அதன் உள்கட்டமைப்பை முழுமையாக மேம்படுத்துவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் கூறினார்.