லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவரான பென் ஸ்டோக்ஸ், ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஸ்டோக்ஸ் இங்கிலாந்துக்காக 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,919 ஓட்டங்கள் குவித்துள்ளார். நேற்று நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிதான் அவருடைய கடைசி ஒருநாள் போட்டியாகும்.
2019ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி உலகக் கிண்ணம் வெல்ல பென் ஸ்டோக்ஸ் முக்கிய காரணமாக இருந்தார்.
ஆல் ரவுண்டரான ஸ்டோக்சுக்கு பந்துவீச்சில் சரிவர வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை எனக் கூறப் படுகிறது.

