மெல்பர்ன்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவின் புது வரவுகளான கிரிஸ்டியன் எரிக்சனும் லிசாண்ட்ரோ மார்டினசும் குழுவில் ஆக்கபூர்வமான திறமையையும் போராட்ட குணத்தையும் வெளிப்படுத்துவார்கள் என்று அதன் நிர்வாகி எரிக் தென் ஹக் சொன்னார்.
பிரண்ட்ஃபோர்ட் குழுவில் இருந்து இலவச ஒப்பந்தத்தில் சென்ற வெள்ளிக்கிழமை மேன்யூவில் இணைந்தார் எரிக்சன். அயக்ஸ் குழுவிற்காக விளையாடி வந்த அர்ஜெண்டினா வீரர் மார்டினஸ் 57 மில்லியன் யூரோவிற்கு மேன்யூவில் சேர்ந்துள்ளார்.

