மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நேற்று நடைபெற்ற நட்புமுறை காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவும் கிரிஸ்டல் பேலஸ் குழுவும் மோதின. இதில் 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது யுனைடெட்.
அக்குழுவின் மூன்று முன்னணி நட்சத்திர வீரர்களான ஆண்டனி மார்சியல், மார்கஸ் ரேஷ்ஃபர்ட், ஜேடன் சான்சோ ஆகியோர் தலா ஒரு கோல் போட்டனர்.
தாக்குதல் ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய மேன்யூ, தற்காப்பில் கோட்டைவிட்டதால் கிரிஸ்டல் பேலஸ் குழுவால் ஒரு கோல் போட முடிந்தது.

