அனல் காற்றில் தகிக்கும் குளிர்காலத்துக்கான வீடுகள்

அனல் காற்றில் தகிக்கும் குளிர்காலத்துக்கான வீடுகள்

1 mins read

பிரிட்டனில் பல ஆண்டுகளாக குளிர் காலத்துக்கு உகந்த வீடுகள் கட்டப்பட்டு வந்தன.

அத்தகைய வீடுகளில் மோசமான குளிர்காலத்திலும் வெப்பம் ஓரளவு இருக்கும்.

இப்போது வரலாறு காணாத அனல் காற்றை பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எதிர்நோக்குகின்றன.

அதனால் பிரிட்டனில் குளிர்காலத்தில் மக்களைப் பாதுகாக்கும் அதே வீகள் அனல் காற்றில் தகிக்கின்றன.

செவ்வாய்க்கிழமையன்று அந்நாட்டில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசைத் தொட்டது.

குளிர் நாடாகச் சொல்லப்படும் பிரிட்டனில் இதுவரை வெப்பநிலை இவ்வளவு அதிகமாகப் பதிவானதில்லை.