செப்டம்பர் மாதம் ஷின்சோ அபேயின் அதிகாரபூர்வ இறுதிச் சடங்கு

செப்டம்பர் மாதம் ஷின்சோ அபேயின் அதிகாரபூர்வ இறுதிச் சடங்கு

1 mins read
b87babea-f0d7-4a20-8924-e0dd1278a392
சுடப்படுவதற்கு முன்பு திரு அபே. கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் -

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் அதிகாரபூர்வ இறுதிச் சடங்கு வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதியன்று நடைபெறும்.

அந்நாட்டின் என்ஹெச்கே ஊடகம் புதன்கிழமையன்று (20 ஜூலை) இதைத் தெரிவித்தது.

திரு அபேயின் அதிகாரபூர்வ இறுதிச் சடங்கு நிப்பொன் புடோக்கன் வளாகத்தில் நடைபெறும்.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது திரு அபே ஜூலை எட்டாம் தேதியன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.