மருத்துவ பயன்பாட்டில் கஞ்சா: இந்தோனீசியா அனுமதி மறுப்பு

மருத்துவ பயன்பாட்டில் கஞ்சா: இந்தோனீசியா அனுமதி மறுப்பு

1 mins read
61f4d67c-3f2e-434d-a09b-f2969d2dacb4
-

ஜகார்த்தா: கஞ்­சாவை மருந்­துவ ரீதி­யாக பயன்­ப­டுத்­தும் வகை­யில் போதைப்­பொ­ருள் சட்­டத்தை மறு­ஆய்வு செய்­யும் மனுவை இந்­தோ

னீ­சிய நீதி­மன்­றம் நிரா­க­ரித்து உள்ளது.

பல சமூக அமைப்­பு­கள், பெரு­மூளை வாதம் கொண்ட பிள்­ளை­

க­ளின் மூன்று தாய்­மார்­க­ள், சென்ற 2020ஆம் ஆண்டு இந்த மறு­ஆய்­வுக்­குத் தாக்­கல் செய்­த­னர்.

குறிப்­பிட்ட அந்த நோய்க்கு கஞ்­சா­வைப் பயன்­ப­டுத்தி சிகிச்­சை­யளிப்­ப­தற்­காக அதைச் சட்­ட­பூர்­வ­மாக்க வேண்­டும் என்று தாய்­மார்­கள் தங்­கள் மனு­வில் கூறி­யி­ருந்­த­னர்.

ஆனால் அதை உறுதி செய்­வதற்­குப் போது­மான ஆராய்ச்­சி­இல்லை என்று கூறிய நீதி­ப­தி­கள் குழு, அந்த மனுவை நிரா­க­ரித்­

தது.

அதே­ச­ம­யம், கஞ்­சா­வின் மருத்­து­வப் பயன்­பாடு குறித்து உட­ன­டி­யாக ஆராய்ச்சி செய்­யு­மாறு அர­சாங்­கத்தை அவர்­கள் வலி­யு­றுத்தி­னர்.

அண்­மை­யில் கஞ்சா பயி­ரி­டு­வதை­யும் உட்­கொள்­வ­தை­யும் தாய்­லாந்து சட்­ட­பூர்­வ­மாக்­கி­யது.