மக்காவ் ‌சூதாட்டக் கூடங்கள் மீண்டும் திறப்பு

மக்காவ் ‌சூதாட்டக் கூடங்கள் மீண்டும் திறப்பு

1 mins read
3859f46b-1b1e-47b6-b65a-e60568dc1735
-

ஹாங்­காங்: மக்­காவ் நக­ரில் வரும் 23ஆம் தேதி முதல் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­ட­வுள்­ளன. கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வித­மாக 12 நாள்­க­ளுக்கு அங்கு சூதாட்­டக் கூடங்­கள் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சிய வர்த்­த­கங்­கள் முடக்­கப்­பட்­டி­ருந்­தன.

அங்கு தொற்­றுச் சம்­ப­வங்­கள் குறைந்­துள்­ள­தைத் தொடர்ந்து தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று அங்கு 10 பேருக்கு மட்­டுமே தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

அத்­தி­யா­வ­சிய வர்த்­த­கங்­கள் உள்­ளிட்ட சில பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­கள் மீண்­டும் செயல்­படும் என்று கூறிய அர­சாங்க அறி­விப்­பில், சூதாட்­டக் கூடங்­கள் திறக்­கப்­ப­டுமா, இல்­லையா என்­பது பற்றி எது­வும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

இருப்­பி­னும், வரும் சனிக்­கி­ழமை முதல் சூதாட்­டக் கூடங்­கள் மீண்­டும் செயல்­பட தொடங்­கும் என்று அது­பற்றி தக­வ­ல­றிந்த வட்­டா­ரம் கூறு­கிறது. ஆனால், திரை­ய­ரங்­கு­கள், உடற்­ப­யிற்­சிக்­கூ­டங்­கள், அழகு நிலை­யங்­கள் தொடர்ந்து மூடப்­பட்­டி­ருக்­கும்.