விளையாட்டுச் செய்திகள்

கிரிக்கெட்: தென்னாப்பிரிக்க லீக் குழுக்களை வாங்கிய ஐபிஎல் குழுக்கள்

கேப்டவுன்: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள புதிய 20 ஓவர் லீக் தொடரில் விளையாடவுள்ள அனைத்து அணிகளையும் இந்தியாவின் ஐபிஎல் அணிகள் வாங்கியுள்ளன. இதன் மூலம் இந்திய ரசிகர்களைக் கவர முடியும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கருதுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் - ஜோஹன்னஸ்பர்க் அணியையும் மும்பை இந்தியன்ஸ் - கேப் டவுன் அணியையும் சன் ரைசர்ஸ் - போர்ட் எலிசபெத் அணியையும் லக்னெள - டர்பன் அணியையும் ராஜஸ்தான் ராயல்ஸ் - பார்ல் அணியையும் தில்லி கேபிடல்ஸ் அணி - பிரிடோரியா அணியையும் ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளன.

தென்னாப்பிரிக்க நிறுவனங்கள் ஏலத்தில் போட்டியிட்டாலும் அதிக தொகையை முன்வைத்து ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் தென்னாப்பிரிக்க 20 ஓவர் லீக் போட்டியின் அணிகளைப் பெற்றுள்ளார்கள்.

1,500 மீட்டர்: பிரிட்டனுக்குத் தங்கம்

வா‌ஷிங்டன்: உலக சாம்பியன்‌ஷிப் திடல்தட போட்டியில்

1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், பிரிட்டனின் ஜெஃப் விட்மேன் தங்கப் பதக்கம் வென்றார்.

1983ஆம் ஆண்டிற்குப் பிறகு, இப்பிரிவில் பிரிட்டன் தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். அவர் பந்தய தூரத்தை மூன்று நிமிடம் 29.23 வினாடிகளில் முடித்தார்.

3 நிமிடம் 29.47 வினாடிகளில் ஓடி பந்தய தூரத்தைக் கடந்த ஒலிம்பிக் வெற்றியாளர் ஜோக்கப் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஸ்பெயினுக்கு வெண்கலம் கிடைத்தது.

டென்னிஸ்: ஜோக்கோவிச்சிற்கு ஆதரவாக 12,000 பேர் கையெழுத்து

நியூயார்க்: பிரபல டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோக்கோவிச்சை அமெரிக்க பொது விருதுப் போட்டியில் விளையாட அனுமதிக்க கோரும், அமெரிக்க டென்னிஸ் சங்கத்திற்கான, இணைய மனுவில் கிட்டத்தட்ட 12,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஜோக்கோவிச் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால், இவ்வாண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க பொது விருதுப் போட்டியில் அவர் கலந்துகொள்ள முடியாத நிலை உள்ளது.

அமெரிக்காவிற்குச் செல்லும் வெளிநாட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது. இதே காரணத்திற்காக, அவர் ஆஸ்திரேலிய பொது விருதுப் போட்டியிலும் கலந்துகொள்ள முடியாமல் போனது.

இலங்கை மண்ணில் பாகிஸ்தான் வெற்றி

காலே: பாகிஸ்தான்-இலங்கை அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி சென்ற 16ஆம் தேதி தொடங்கியது. பூவா, தலையா வென்ற இலங்கை அணி பந்தடிக்க முடிவு செய்தது. அது முதல் இன்னிங்சில் 222 ஓட்டங்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 218 ஓட்டங்கள் எடுத்தது.

342 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் 2வது இன்னிங்சை ஆடியது. இறுதியில் பாகிஸ்தான் அணி 344 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது.

பாகிஸ்தானின் வரலாற்று சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி விரட்டிய 2வது அதிகபட்ச இலக்கு இது. காலேவில் முதல்முறையாக ஓர் அணி 4வது இன்னிங்சில் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி.

இந்தியா-ஸிம்பாப்வே கிரிக்கெட் தொடர்

புதுடெல்லி: ஸிம்பாப்வேவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டுக்கு எதிராக 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது. ஹராரே நகரில், வரும் ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் இந்தப் போட்டிகள் நடைபெறும்.

2016ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணி ஸிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்தத் தொடரில் விவிஎஸ் லக்‌ஷ்மண் அணியின் பயிற்சியாளராக இருப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!