புட்டினுக்கு ஈரான் தலைவர் ஆதரவு

புட்டினுக்கு ஈரான் தலைவர் ஆதரவு

1 mins read
7b185ffb-faec-41df-b840-9f5dc76c4687
தெஹ்ரானில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை (இடது) ஈரானிய உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி காமேனி (நடுவில்) வரவேற்றார். படம்: ஏஎஃப்பி -

தெஹ்­ரான்: ர‌ஷ்­யாவை உலக நாடு­களில் இருந்து தனி­மைப்­ப­டுத்த மேற்­கத்­திய நாடு­கள் முயற்சி செய்து வரும் வேளை­யில், ர‌ஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் ஈரா­னுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார். உக்­ரேன் மீதான படை­யெ­டுப்­பிற்­குப் பிறகு புட்­டி­னின் முதல் வெளி­நாட்­டுப் பய­ண­மா­கும் இது.

இப்­ப­ய­ணத்­தின்­போது புட்­டின் ஈரா­னின் உயர்­மட்ட தலை­வர் ஆய­துல்லா அலி காமே­னி­யைச் சந்­தித்­தார். அப்­போது அவர், புட்­டி­னின் படை­யெ­டுப்­பிற்­கு ­முழு ஆத­ரவு தெரி­வித்­தார்.

அமெ­ரிக்­கா­வும் அதன் ஐரோப்­பிய நட்பு நாடு­க­ளுக்கு, உக்­ரேன்­மீது படை­யெ­டுப்­ப­தைத் தவிர ர‌ஷ்­யா­விற்கு வேறு எந்த வழி­யை­யும் விட்­டு­வைக்­க­வில்லை என்ற புட்­டி­னின் கூற்றை காமேனி மீண்­டும் சொன்­னார்.

"போர் என்­பது கடி­ன­மான சூழல். போரால் மக்­கள் சிர­மப்­ படு­வ­தில் விருப்­ப­மில்லை.

"ஆனால், உக்­ரேன் விவ­கா­ரத்­தில், நீங்­கள் படை­யெ­டுக்­க­வில்லை என்­றால், எதிர்­த­ரப்பு அதைத் செய்தி­ருக்­கும்," என்று அவர் புட்­டி­னி­டம் சொன்­னார்.

போர் பற்­றிய காமே­னி­யின் இந்­தப் பகி­ரங்­கப் பேச்சு, ரஷ்­யா­வின் மற்­றொரு கூட்­டா­ளி­யான சீனா­வின் ஆத­ர­வை­விட வலு­வா­ன­தா­கப் பார்க்­கப்­ப­டு­கிறது.

மாஸ்­கோ­விற்­கும் தெஹ்­ரா­னுக்­கும் இடை­யி­லான நீண்­ட­கா­ல­மான உறவு, மேலும் வலுப்­பெ­று­வ­தற்­கான அறி­கு­றி­யா­க­வும் இருந்­தது காமே­னி­யின் பேச்சு.

இந்­தப் பய­ணத்­தின்­போது, துருக்கி அதி­பர் எர்­டோ­க­னை­யும் புட்­டின் சந்­தித்­தார். மூவ­ரும் உக்­ரேன் போர், சிரி­யா­வின் நிலைமை குறித்து விவா­தித்­த­னர்.

துருக்­கி­யின் வட­கி­ழக்­கில் புதிய ராணுவ ஊடு­ரு­வல் அச்­சு­றுத்­தல் குறித்­தும் பேசப்­பட்­டது.

ஈரா­னி­டம் இருந்து ஆளில்லா வானூர்­தியை வாங்க ர‌ஷ்யா திட்­ட­மி­டு­வ­தா­க­வும் ஆனால், இச்சந்திப் பின்போது அது­பற்றி வெளிப்­படை­யாக தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என்­கிறது அமெ­ரிக்­கா.