ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் தொற்று; வீட்டில் இருந்து வேலை செய்ய பரிந்துரை

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மருத்து­வம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வுக்கு நேற்று அதி­க­ரித்­தது. எனவே, உட்­புற இடங்­களில் மக்­கள் முகக்­க­வ­சம் அணிந்­து­கொள்­ள­வும் கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வும் அதி­கா­ரி­கள் பரிந்­து­ரைத்து உள்­ள­னர்.

மேலும் ஊழி­யர்­கள் வீட்­டில் இருந்து வேலை பார்ப்­ப­தற்கு நிறு­வ­னங்­கள் அனு­ம­திக்க வேண்­டும் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது.

மிக­வும் எளி­தில் பர­வக்­கூ­டிய பிஏ.4, பிஏ.5 துணை திரி­பு­க­ளால், அங்கு கடந்த ஏழு நாள்­களில் 300,000த்திற்­கும் அதி­க­மான தொற்றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­

கின.

இரண்டு மாதங்­களில் ஆக அதி­க­மாக நேற்று ஒரே நாளில் 53,850 தொற்­றுச் சம்­ப­வங்­கள் கண்­ட­றி­யப்­பட்­டன.

எனினும், இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வரும் வாரங்­களில் மில்­லி­யன்­கணக்­கா­னோர் தொற்­றுக்கு ஆளாகக்­கூ­டும் என்று அதி­கா­ரி­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

கிட்­டத்­தட்ட 5,300 பேர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். ஆக அதி­க­மாக இந்த எண்­ணிக்கை சென்ற ஜன­வரி மாதம் 5,390ஆக இருந்­தது.

கூடுதல் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள தொய்வும் சுகாதார நெருக்கடியை மோசமடையச் செய்துள்ளது.

அங்கு இதுவரை 71% மட்டுமே கூடுதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!