வாஷிங்டன்: உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஐந்து மாதங்களைத் தொட்ட நிலையில் இதுவரை கிட்டத்தட்ட 15,000 ரஷ்ய வீரர்கள் போரில் பலியானதாக அமெரிக்க உளவுத்துறை கூறுகிறது.
தற்போது கிழக்கு உக்ரேனை கைப்பற்ற ரஷ்யா கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்ய தாக்குதலில் உக்ரேன் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உக்ரேன் மீதான போரில் 15,000 ரஷிய வீரர்கள் பலியானதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. ''அமெரிக்க உளவுத்துறையின் அண்மைய தரவுகளின் படி, உக்ரேன் போரில் 15 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
45,0000 பேர் காயம் அடைந்துள்ளனர். இது ஒரு குறிப்பிடத்தக்க இழப்பாகும். மேலும் உக்ரேனியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட உக்ரேனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன,'' என்று அமெரிக்காவின் மத்திய உளவுத்துறை ஆணையத்தின் இயக்குனர் வில்லியம் பர்னஸ் கூறியுள்ளார். இந்த நிலையில் உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியின் மனைவி ஒலேனா அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

