இலங்கையின் புதிய பிரதமாராக மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் இன்று பதவியேற்றுக்கொண்டார். 73 வயதான திரு குணர்த்தன கல்வி, நீர்வளம் போன்ற முக்கிய அமைச்சுகளுக்கு பொறுப்பு வகித்தவர்.
ராஜபக்சேக்களின் வலதுகரமாக திரு குணவர்ததன கருதப்படுகிறார். இதோடு, அவர் திரு விக்ரமசிங்கவின் கல்லூரி நண்பராவார்.
கல்வி அமைச்சராக சுசில் பிரேமஜயந்தாவும், கடல்தொழில் வளங்கள் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கும் இன்று பதவி பிரமாணம் செய்யப்பட்டது.
மற்ற அமைச்சர்களுக்கும் இன்று பதவி பிரமாணம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

