இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
திரு அதானியின் சொத்து மதிப்பு 112.5 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் அவரின் சொத்து 36 பில்லியன் டாலர் அதிகரித்ததாகக் கூறப்பட்டது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது செல்வத்திலிருந்து 20 பில்லியன் டாலரை தனது அறநிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்குவதாகக் கூறியிருந்தார். இதை தொடர்ந்து, உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் அவர் 102 பில்லியன் டாலர் மதிப்புடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த ஆண்டு தனது 60வது பிறந்தநாளை முன்னிட்டு திரு அதானி 7.7 பில்லியன் டாலரை நன்கொடை வழங்குவதாகக் கூறியிருந்தார்.

