பெய்ஜிங்: அடுத்த பத்து நாள்களில் நாட்டின் கிழக்கிலிருந்து மேற்கு வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று முதல் வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும் என்றும் அனல்காற்றுக்கு முந்திய மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாள்கள் கடுமையான வெப்பம் நிலவும் என்றும் கூறப்படுகிறது.
இம்மாதம் 5 முதல் 17ஆம் தேதி வரை நிலவியதைப் போன்றே இந்த அனல்காற்றும் இருக்கும் என்றாலும் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும் என்று வானிலை மைய தலைமை அதிகாரி சொன்னார்.
தொழிற்சாலைகள் நிறைந்த ஜின்சியாங் மாநிலத்தின் சில நகரங்களில், வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஃபுஜியான், குவாங்டான் போன்ற பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படும் ஆபத்து உள்ளது என அவசரகால மேலாண்மை அமைச்சு எச்சரித்துள்ளது.

