29 நாய்கள் சுட்டுக்கொலை

29 நாய்கள் சுட்டுக்கொலை

1 mins read
3ca83a1c-44b2-4632-8285-dc7ba500672e
-

தோஹா: கத்தார் நாட்டில் சில ஆடவர்கள் ஒன்றுசேர்ந்து

29 நாய்களைச் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டின் தலைநகர் தோஹா அருகேயுள்ள தொழிற்சாலை வளாகம் ஒன்றினுள் நால்வர் நுழைந்தனர். அவர்களில் இருவர் வேட்டைத் துப்பாக்கி வைத்திருந்தனர்.

அப்போது தங்களைத் தடுத்த பாதுகாவலர்களைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, உள்ளே சென்ற அவர்கள் சரமாரியாக நாய்களைச் சுட்டுத் தள்ளினர்.

இதனால் குட்டிநாய்கள் உட்பட மொத்தம் 29 நாய்கள் பரிதாபமாக இறந்தன. சில நாய்கள் குண்டு பாய்ந்து காயமடைந்தன.

சென்ற 10ஆம் தேதி நடந்த இச்சம்பவம் குறித்து, அண்மையில்தான் தகவல்கள் வெளியானது.

தமது மகனை நாய் ஒன்று கடித்துவிட்டதால் அவற்றைச் சுட்டுக்கொன்றதாக அந்த கும்பலில் ஒருவன் சொன்னதாக பாதுகாவலர் களில் ஒருவர் கூறினார்.

நாய்­க­ளைச் சுட்­டுக்­கொன்­ற­வர்­கள் அடை­யா­ளம் காணப்­பட்­ட­தா­க­வும் இது­கு­றித்து காவல்­து­றை­யி­னர் விசா­ரணை நடத்தி வரு­வ­தா­க­வும் அந்­நாட்டு அதி­காரி­கள் கூறி­னர்.