டிரஸ் பிரதமரானால் அடுத்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி தோற்கும்: சுனக்

டிரஸ் பிரதமரானால் அடுத்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி தோற்கும்: சுனக்

2 mins read
34507143-1d57-4220-8917-fe4a836d7deb
அடுத்த பொதுத் தேர்தல் வெற்றியை கவனத்தில் கொண்டு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார் ரி‌ஷி சுனக் (மேல் படம்). அவரது போட்டியாளரான லிஸ் டிரஸ் தமது பிரசாரத்தில் வரிக் குறைப்பிற்கு அதிக முக்கியத்துவம் தருவது அவருக்குப் பலமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

லண்­டன்: தமது போட்டி வேட்­பா­ள­­ரும் பிரிட்­ட­னின் வெளி­யு­றவு அமைச்­ச­ரு­மான லிஸ் டிரஸை கட்சித் தலை­வ­ரா­க­வும் அடுத்­த பிர­த­ம­ரா­க­வும் தேர்ந்­தெ­டுத்­தால், அடுத்த பொதுத் தேர்­த­லில் கன்­சர்­வேட்­டிவ் கட்சி தோல்­வி­ய­டை­யக்­கூ­டும் என்று சக போட்­டி­யா­ள­ரும் முன்­னாள் நிதி­ய­மைச்­ச­ரு­மான ரி‌ஷி சுனக் எச்­ச­ரித்துள்­ளார்.

பிரிட்­டி‌ஷ் பிர­த­மர் பத­விக்­குப் போட்­டி­யிட்ட எட்­டுப் பேரில், முதல் சுற்­றில் இருந்து தொடர்ந்து முன்­னிலை வகித்து வரு­கி­றார் ரி‌ஷி சுனக்.

ஆனால், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வாக்­க­ளித்த ஐந்­துச் சுற்று­களி­லும் மற்ற வேட்­பா­ளர்­களை ஓரங்­கட்டி தொடர்ந்து முன்­னேற்­றம் கண்டு, டிரஸ் இரண்­டாம் இடம் பிடித்­தார்.

கட்சி உறுப்­பி­னர்­கள் வாக்­க­ளிக்க உள்ள இறு­திக்­கட்ட வாக்­கெ­டுப்­பி­லும் டிரஸ் வெற்றி பெறு­வ­தற்­கான வாய்ப்பு அதி­கம் உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மூன்­றில் இரண்டு பங்கு உறுப்­பி­னர்­கள் தலைமைப் பத­விக்கு டிர­ஸைத் தேர்ந்­தெ­டுக்க விரும்­பு­வ­தாக அண்­மைய கருத்­துக்­க­ணிப்பு ஒன்று கூறு­கிறது.

போரிஸ் ஜான்­ச­னின் ஆட்சி கவிழ்­வ­தற்கு முக்­கிய கார­ண­மாக இருந்­த­தா­கக் கூறப்­படும் சுனக்­கின் பதவி வில­கல் கார­ண­மாக, கிட்­டத்­தட்ட 40 விழுக்காட்டினர் அவரை 'நம்­ப­முடியாது' என கூறு­வதா­க­வும் அக்­க­ணிப்பு சொன்­னது.

தமது பிர­சா­ரத்­தில் வரி குறைப்பு பற்றி எது­வும் கூற­மால், டிர­ஸைத் தாக்கிப் பேசு­வ­தும் அவரை விமர்­சனத்­திற்கு ஆளா­க்கி­யுள்­ளது.

"அடுத்­த தேர்­த­லில் எதிர்க்­கட்­சியைத் தோற்­க­டிக்க வேண்­டு­மென்­றால், அதற்கு சரி­யான ஆள் நான்­தான்," என்­றார் சுனக்.

வரிக் குறைப்பை முன்­வைத்து முந்­திய சுற்­று­களில் முன்­னேற்­றம் கண்ட டிரஸ், தொடர்ந்து சுனக்­கின் வரிக் கொள்­கை­க­ளைச் சாடி­னார்.

வரிக் குறைப்­பால் அர­சாங்­கத்­திற்கு ஆண்­டுக்கு குறைந்­த­பட்­சம் 30 பில்­லி­யன் பவுண்டு ($50 பில்­லி­யன் வெள்ளி) செல­வா­கும் என்ற டிரஸ், அது சமா­ளிக்­கக்­கூ­டிய ஒன்­று­தான் என்­றார்.

சுனக்கோ, அது 40 ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்­குப் பண­வீக்க உயர்­வுக்கு வழி­வ­குக்­கும் என்­கிறார்.

இதை­ய­டுத்து, அடுத்த ஆறு வாரத்­திற்கு நடை­பெ­ற­வுள்ள பிர­சா­ரம் பர­ப­ரப்­பும் விறு­வி­றுப்­பும் நிறைந்­த­தாக இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

வரும் 2024ஆம் ஆண்­டின் இறுதி­யில் பிரிட்­டனில் பொதுத் தேர்­தல் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.