புதுடெல்லி: அனைத்துலக ஒலிம்பிக் மன்றத்தில் இருந்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தை நீக்கிவிடுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது, சங்கத்தில் வெளி தலையீடு, நீதிமன்றப் போராட்டம் ஆகியவற்றின் காரணமாக அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் இவ்வாறு கூறியுள்ளது.
சென்ற 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட வேண்டிய ஒலிம்பிக் மன்றத்தின் தேர்தல் இதுவரை நடத்தப்படவில்லை.
இதுகுறித்து அனைத்துலக ஒலிம்பிக் மன்றமும் ஆசிய ஒலிம்பிக் மன்றமும் கூட்டாக, இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.
"இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அண்மைய செயல்பாடுகள் எங்களுக்குக் கவலை அளிக்கிறது.
"பிரச்சினைகளுக்கு தங்களுக்குள் தீர்வு காணாமல், நீதிமன்றத்தை நாடுவது துரதிர்ஷ்டவசமானது.
"இனியும் தாமதப்படுத்தாமல் வரும் வாரங்களில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கான தேர்தலை நடத்தவேண்டும்.
"இல்லையென்றால் தேர்தல் நடைபெற்று இந்திய ஒலிம்பிக் சங்கம் வழக்கமாக செயல்படும் வரை அனைத்துலக மன்றத்தில் இருந்து நீக்கப்படும்," என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

