ஈட்டி எறிதல்: இறுதிப் போட்டியில் இரண்டு இந்திய வீரர்கள்

ஈட்டி எறிதல்: இறுதிப் போட்டியில் இரண்டு இந்திய வீரர்கள்

1 mins read
6396c8f9-5dd3-4115-ba24-dd17a3ea97b5
-

ஒரி­கான்: உல­கத் திடல்­தட சாம்­பி­யன்­ஷிப் போட்டி அமெ­ரிக்­கா­வின் ஒரி­கான் மாநி­லத்­தின் யூஜின் நக­ரில் நடை­பெற்று வரு­கிறது.

இதில் ஆண்­க­ளுக்­கான ஈட்டி எறி­த­லில், ஒலிம்­பிக் வெற்­றி­யா­ள­ரான இந்­தி­யா­வின் நட்­சத்­திர வீரர் நீரஜ் சோப்ரா 'ஏ' பிரி­வில் இடம் பெற்று இருந்­தார்.

இவர் தமது முதல் முயற்­சி­யிலேயே 88.39 மீட்­டர் தூரம் எறிந்­தார். இதன் மூலம் அவர், உல­கத் திடல்­த­டப் போட்­டி­யில் முதல்­முறை­யாக இறு­திப்­போட்­டிக்கு முன்­னே­றி­னார். 'பி' பிரி­வில் இடம்­பெற்று இருந்த மற்­றோர் இந்­திய வீர­ரான ரோகித் யாதவ் 80.42 மீட்­டர் தூரத்­திற்கு ஈட்­டியை எறிந்து, இறு­திப் போட்­டிக்­குத் தகுதி பெற்­றார்.