சுட்டெரிக்கும் வெயிலுக்கு 1,700 பேர் பலி

சுட்டெரிக்கும் வெயிலுக்கு 1,700 பேர் பலி

1 mins read
c3c64b53-25be-40a3-b3e8-95b7b0f9033f
படம்: ராய்ட்டர்ஸ் -

ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுளில் கடு­மை­யான வெயிலால் 1,700 பேர் மாண்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஸ்பெயின், போர்ச்சுகலை கடந்த சில வாரங்களாக கடு­மை­யான வெயில் வாட்டி வதைக்­கிறது. இந்த நிலை இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. இதனால், உயிரிழப்பு அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

கடும் வெயிலால் குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள் ஆகியோர் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர் எனக் கூறப்படுகிறது.

பருவநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராட ஐரோப்பிய நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அது கேட்டுக்கொண்டது.