வறுத்தெடுக்கும் அனல்காற்று; உயிரிழப்புகள், பேரழிவுகள்

வறுத்தெடுக்கும் அனல்காற்று; உயிரிழப்புகள், பேரழிவுகள்

2 mins read
ed932361-675e-4ce4-b1b8-4f8a9a1e7d85
-

கோப்­பன்ஹேகன்: உல­கையே வறுத்­தெ­டுக்­கும் அனல்­காற்­றுக்கு ஸ்பெ­யின், போர்ச்­சு­க­லில் மட்­டும் 1,700க்கும் மேற்­பட்­ட­வர்­கள் மாண்­டு­விட்­ட­தாக உல­கச் சுகா­தார நிறு­வ­னத்­தின் ஐரோப்­பிய அலு­வ­ல­கம் தெரி­வித்­துள்­ளது.

"கடந்த பத்­தாண்­டு­க­ளுக்­கும் மேலாக, அனல்­காற்­றும் அதன் கார­ண­மாக காட்­டுத்­தீச்­சம்­ப­வங்­களும் அதி­க­ரித்­துள்­ளன. இவற்­றின் கார­ண­மாக ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் மாண்­டு­விட்­ட­னர்.

இந்த ஆண்டு, ஸ்பெ­யின், போர்ச்­சு­க­லில் மட்­டும் இது­வரை 1,700 பேர் மாண்­டு­விட்­ட­னர்," என்­றார் உல­கச் சுகா­தார நிறு­வ­னத்­தின் ஐரோப்­பிய இயக்­கு­நர் கூளுக்.

வரும் நாள்­களில் இந்த எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கும் என்­றும் அவர் சொன்­னார்.

பாரிஸ் பருவ நிலை ஒப்­பந்­தத்­தைச் செயல்­ப­டுத்த நாடு­கள் முனைப்பு காட்­ட­வேண்­டும் என்­றார் அவர்.

அதீத வெப்­ப­நிலை கார­ண­மாக, லண்­ட­னின் லுட்­டான் விமான நிலை­யத்­தின் ஓடு­பாதை உரு­கி­விட்­டது. சென்ற திங்­கட்­கி­ழ­மை­யன்று நடந்த இச்­சம்­ப­வம் பரு­வ­நிலை மாற்­றத்­தைத் தாக்­குப்­பி­டிக்­கும் நாடு­கள் தங்­கள் உள்­கட்­ட­மைப்பை மேம்­ப­டுத்த வேண்­டும் என்­ப­தைக் காட்­டு­கிறது.

அமெ­ரிக்­கா­வில் 10 ஆண்டு காணாத வெப்­ப­நிலை

இதற்­கி­டையே, அமெ­ரிக்­கா­வின் வட­கி­ழக்கு மற்­றும் நியூ­யார்க் பகு­தி­களில் வெயில் சுட்­டெ­ரிக்­கும் என்று எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

மன்­ஹாட்­டன் சென்ட்­ரல் பூங்­கா­வில் இது­வ­ரை­யில்­லாத அள­வுக்கு இன்று 37 டிகிரி செல்­சி­யஸ் வெயில் வாட்டி வதைக்­கும் என்று கூறப்­பட்­டுள்­ளது. இதற்கு முன்பு அங்கு சென்ற 2012ஆம் ஆண்டு இதே வெப்­ப­நிலை இருந்­தது.

இப்­ப­கு­தி­யில், 1936ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி­யன்று ஆக அதி­க­மாக 41 டிகிரி செல்­சி­யஸ் வெப்­ப­நிலை நில­வி­யது.

நியூ­யார்க்­கில் வெப்­ப­நிலை

32 டிகிரி செல்­சி­ய­சைத் தாண்­டும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்­டு

உள்­ளது.

வேக­மாக உரு­கும் பனிப்­பா­றை­கள்; சீனா­வில் வெள்ள அபா­யம்

தொடர்ந்து நீடிக்­கும் அனல்­காற்று கார­ண­மாக, பனிப்­பா­றை­கள் வேக­மாக உரு­கு­வ­தால், சீனா­வில் வெள்­ளம், மண்­ச­ரிவு ஏற்­படும் என அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்டு உள்­ளது.

ஜூன் மாதம் முதல் சீனா­வின் பல பகுதிகளிலும் தொடர்ந்து வெயில் சுட்­டெ­ரிக்­கிறது.

"தெற்கு, கிழக்­குப் பகு­தி­களில் கடந்த 10 நாள்­க­ளாக மோச­மான வெப்­ப­நிலை நில­வு­வ­தால், பனிப்­பா­றை­கள் வேக­மாக உரு­கு­கின்­றன.

"அது, பல இடங்­களில் திடீர் வெள்­ளம், மண்­ச­ரிவு, நிலச்­ச­ரிவு போன்ற இயற்கை பேர­ழி­வு­களை ஏற்­ப­டுத்­து­கிறது," என்­றார் ஜின்­ஜி­யாங் வானிலை மைய அதி­காரி சென் சுன்­யான் சொன்­னார்.

ஜின்­ஜி­யாங் மலைப்­ப­கு­தி­களில் பனிப்­பா­றை­கள் வேக­மாக உரு­கு­வ­தால், கிர்­கிஸ்­தா­னு­ட­னான சீன எல்­லை­யில் உள்ள அக்சு ஆற்­றின் கிளை நதி­யில் உள்ள அணை­கள் உடை­யும் அபா­யம் இருப்­ப­தாக சீன வானிலை மையம் முன்­னு­ரைத்­தது.