கோத்தா பாரு: தென்கிழக்காசிய நாடுகளிலேயே, மலேசியாவின் பணவீக்கம் குறைவாக உள்ளதாகவும் அதற்கு அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகளே காரணம் என்றும் அந்நாட்டின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சொன்னார்.
உலக அரசியல் நெருக்கடி காரணமாக மலேசியர்களின் வாழ்க்கை செலவினம் அதிகரித்து உள்ளது.
இருப்பினும், 77 மில்லியன் ரிங்கிட் உதவித் தொகை ஒதுக்கீடு உட்பட பல்வேறு முயற்சிகளின் வாயிலாக, அதன் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்க, அரசாங்கம் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதை அவர் குறிப்பிட்டார்.
கிளந்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது இதனைத் தெரிவித்த அவர், மலேசிய வரலாற்றில் ஆக அதிக அளவில் 8.2 பில்லியன் ரிங்கிட் நிதி உதவி வழங்கப்பட்டதையும் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலாலம்பூரில் நூற்றுக்கணக் கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரும்பாலும் மாணவர்களைக் கொண்ட அக்குழு, தங்களை 'டுரூன் இயக்கம்' என்று கூறிக்கொண்டது.
டட்டரான் மெர்டேக்கா நோக்கி செல்லவிருந்த அவர்களை, சோகோ கடைத்தொகுதிக்கு அருகில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி
னர்.
ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான் பகுதிக்கு அருகில்
1 கிலோ மீட்டர் தூரத்திற்கு காவல்துறையினர் பல அடுக்கு தடுப்புகளை அமைத்தனர்.
விலைவாசி உயர்வால் மக்கள் சிரமங்களை அனுபவிக்கும் நேரத்தில் அமைச்சர்களுக்குச் சம்பள உயர்வு அளிப்பது ஏன் என்று குழு உறுப்பினரான அமீர் கேள்வி எழுப்பினார்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதோடு, அமைச்சர்களின் சம்பளம் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

