லண்டன்: தாம் பிரிட்டிஷ் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், எஞ்சியுள்ள ஐரோப்பிய ஒன்றியச் சட்டங்களை நீக்குவேன் என்று கூறியுள்ளார் பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் லிஸ் டிரஸ். ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்கள் பிரிட்டனின் வர்த்தகங்களுக்குத் தடையாக உள்ளதாக அவர் சொன்னார்.
இதே வாக்குறுதியை மற்றொரு பிரதமர் வேட்பாளரான ரிஷி சுனக்கும் சென்ற வாரம் கூறியிருந்தார். சுனக்கைவிட டிரஸ் 24 புள்ளிகள் முன்னிலை வகிப்பதாக கருத்துகணிப்பு கூறுகிறது.

